உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் ரூ.70 லட்சம் உண்டியல் காணிக்கை

காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் ரூ.70 லட்சம் உண்டியல் காணிக்கை

நகரி: காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், ஒரு மாத உண்டியல் மூலம், 70 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்து உள்ளது.சித்துார் மாவட்டம், ஐராலா அருகே, வரசித்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆந்திரா, தமிழகம், கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த, ஒரு மாதத்தில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை தொகை, நேற்று முன்தினம், கோவில் நிர்வாக அதிகாரி பூர்ணசந்திர ராவ் மேற்பார்வையில் எண்ணப்பட்டது.இதில், 69,97,104 ரூபாய், 19 கிராம் தங்கம், 329 கிராம் ெவள்ளி, 259 அமெரிக்க டாலர், 215 அரபு நாட்டு தினார், 30 இங்கிலாந்து பவுண்டு, வருவாயாக கிடைத்தது.அன்னதான திட்டத்திற்காக, 4,406 ரூபாய் கிடைத்தது என, கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !