கூட்டாம்புளி பரிசுத்த அந்திரேயாவின் ஆலய அசன பண்டிகை விழா
சாயர்புரம்: புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி ராமசாமியாபுரம் பரிசுத்த அந்திரேயாவின் ஆலய அசன பண்டிகை விழா நடந்தது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், புதுக்கோட்டை சேகரத்திற்குட்பட்ட கூட்டாம்புளி ராமசாமியாபுரம் பரிசுத்த அந்திரேயாவின் ஆலயத்தில் 88 வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 23 ம் தேதி இன்னிசை நிகழ்சியும், 24, மற்றும் 25 ம் தேதிகளில் பஜனை பிரசங்கமும், 26, 27, மற்றும் 28ம் தேதிகளில் கன்வென்ஷன் கூட்டமும் நடந்தது. 29ம் தேதி மாலை ஆயத்த ஆராதனையும், பண்டிகை நாளான 30ம் தேதி அதிகாலை 88வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து அன்று மாலை அசன விருந்தும், இரவு ஸ்தோத்திர ஆராதனையும் நடந்தது. அசன விருந்தில் கூட்டாம் புளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சபை மக்கள் செய்திருந்தனர்.