உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதை கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

வேதை கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

வேதாரண்யம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாம் சோமாவாரத்தையொட்டி சிவலிங்கத்துக்கு, 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது. இதில், 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின், பிரகாரத்தில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், ஸ்வாமிக்கு சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது.இதேபோல, வேதை நாகை ரஸ்தா காசிவிஸ்வநாதர் கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், கோடியக்காடு குலகர் கோவில், அகஸ்தியம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !