பரமக்குடியில் ஆருத்ரா தரிசனம் டிச., 9ல் காப்பு கட்டுதலுடன் துவக்கம்!
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச., 9ல், மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. விழாவையொட்டி டிச., 10 முதல் 17ம் தேதி வரை தினமும் காலையில் மாணிக்கவாசகர் ஆடி வீதி உலாவும், மாலையில் திருவெம்பாவை வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். டிச., 17ம் தேதி இரவு 7 மணிக்கு உற்சவர் நடராஜமூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடுடன், கோயில் மகா மண்டபத்தில் ஆனந்த தாண்டவம் நடக்கும். பின், இரவு 3 மணிக்கு மூலவர், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்படும். டிச., 18ல், காலை 9 மணிக்கு நடராஜர் புஷ்பக விமானத்தில் வீதி உலாவும், இரவு 7மணிக்கு கோயில் வளாகத்தில் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சந்திரசேகர சுவாமி காட்சியளிப்பார்.விழா ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் செய்து வருகின்றனர்.