தூய இருதய ஆண்டவர்பசிலிகா ஆண்டு விழா
ADDED :4365 days ago
புதுச்சேரி: தூய இருதய ஆண்டவர் பசிலிகாவில், விசுவாசத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.கடலூர் திருபாதிரிப்புலியூர் செயின் ஜோசப் பள்ளி முதல்வர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். அமலோற்பவம் பள்ளி லூர்துசாமி முன்னிலை வகித்தார். ஜோசப் ராஜ் வரவேற்றார். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பங்கு தந்தை மரிய ஜோசப் பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் சார்லஸ்கோலன், விண்சன்ட் ராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.