108 சங்காபிஷேக பூஜை!
ADDED :4693 days ago
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, டி.பி.ஏ., காலனி, காசி விஸ்வநாதர் கோவிலில், 18ம் ஆண்டு, கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9.05 மணிக்கு கணபதி ஹோமம், 11.00 மணிக்கு, சங்காபிஷேகம் நடந்தது. 108 வலம்புரி சங்குகள், லிங்க வடிவில் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 12.00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்ன தானம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.