திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஏப்., 17ல் ஜெயந்தன் பூஜை
ADDED :8 hours ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில் ஏப்.,17 ல் ஜெயந்தன் பூஜை விழா நடைபெறுகிறது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் இந்திரனின் மகனான ஜெயந்தன் முனிவரின் சாப விமோசனம் பெற பைரவரை வழிபட்ட தலம் ஆகும், அதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சித்திரை முதல் வெள்ளிக்கிழமை ஜெயந்தன் பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்., 17ல் காலை 9:00 மணிக்கு அஷ்ட பைரவர் யாக பூஜைகள் துவங்கும். காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி, காலை 12:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம், பின்னர் அலங்காரத்தில் தீபாராதனை நடைபெறும். இரவில் குதிரை வாகனத்தில் உற்ஸவ பைரவர் புறப்பாடு நடைபெறும். காலை முதல் பெண்கள் மாவிளக்கேற்றி பைரவரை வழிபடுவர்.