ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா: 17ம் தேதி தேரோட்டம்
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக கருதப்படும் இக்கோவிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல், கோஷ்டி, திருமஞ்சனம் நடந்தது.
நவதிருப்பதி திருத்தலங்களில் முதலாவதும், சூரிய பகவானுக்குரிய தலமுமான உள்ளது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில். இத்தலத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும். இங்கு சித்திரை திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கோவில் முன்புள்ள கொடி மரத்தின் அருகே, உற்ஸவர் கள்ளபிரான் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கொடி பட்டம் சுற்றி கொண்டு வரப்பட்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும், காலையிலும் இரவிலும் சுவாமி கள்ளபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் முன்றாம் நாளான இன்று 11ம் தேதி காலை தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை அனுமான் வாகனத்தில் சுவாமி விதி உலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை ஏப். 13ம் தேதியும், திருத்தேரோட்டம் 17ம் தேதியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.