விவேகானந்தர் ரதம் ஆம்பூரில் வரவேற்பு
ADDED :4433 days ago
வேலூர்: விவேகானந்தர், 150வது ஜெயந்தி ரத ஊர்வலத்திற்கு, ஆம்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராம கிருஷ்ணா மடம் சார்பில், விவேகானந்தர் ரத ஊர்வலம் நடந்து வருகிறது. நேற்று, ரத ஊர்வலம், வேலூர் மாவட்டம், ஆம்பூர் வந்தது. நகராட்சி தலைவர் சங்கீதா, இந்து கல்வி சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, தமிழ்ச்செல்வன், குப்புசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் மதியழகன், அன்னை தெரசா சேவா சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கிய வீதிகளின் வழியாக ரதம் சென்றது.ராம கிருஷ்ண நற்பணி மன்ற தலைவர் மனோகரன், நாட்றம்பள்ளி தியாகராசா சுவாமி, கோயம்புத்தூர் சீமத் சுவாமிகள் ஆகியோர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.