உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில்பெருவிழா ஆடம்பர தேர்பவனி

பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில்பெருவிழா ஆடம்பர தேர்பவனி

விழுப்புரம்: விழுப்புரம் நாப்பாளைய தெருவில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு பெரு விழா ஆடம்பர தேர்பவனி நேற்று நடந்தது.இதையொட்டி கடந்த 25ம் தேதி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் கொடியேற்றப்பட்டது. தினம் மாலை 5:30 மணிக்கு தேர்பவனி மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை 7:30 மணிக்கு புதுவை, கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பங்கு பெருவிழா மற்றும் ஆடம்பர கூட்டு பாடற்திருப்பலி நடந்தது. மாலை 5:30 மணிக்கு திருப்பலி, இரவு 7:15 மணிக்கு அத்திப்பாக்கம் பங்குதந்தை சகாய அருட்செல்வம் தலைமையில் ஆடம்பர தேர்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு திரு.வி.க., வீதி, காந்தி சிலை வழியாக சென்றது. இன்று (4ம் தேதி) காலை 7:30 மணிக்கு பங்கு தந்தை ஹென்றி எழில்மாறன், உதவி பங்குதந்தை தோம்னிக் சாவியோ தலைமையில் திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !