மழை வேண்டி சிறப்பு யாகசாலை பூஜை
ADDED :4336 days ago
வீரசிகாமணி: சேர்ந்தமரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் காலமழை, பருவமழை பொய்த்து விட்ட நிலையில் தற்போது பெய்துவரும் பருவமழை குளங்களில் கரம்பை குழிகள் கூட நிரம்பாத நிலையில் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி மழை வேண்டி சிறப்பு வழிபாடு செய்வதற்காக வீரசிகாமணி கல்லகநாடி அம்மன் கோயிலில் யாகசாலை பூஜையும், 25 பால்குடங்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா கண்ணன்ஐயர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.