தூயபவுல் ஆலய புதிய கட்டிடத்திற்கு அடிக்கல்
ADDED :4335 days ago
முக்கூடல: ஆழ்வான்துலுக்கப்பட்டி தூயபவுல் ஆலய புதிய கட்டிடத்திற்கு நெல்லை சிஎஸ்ஐ பிஷப் அடிக்கல் நாட்டினார்.பாப்பாக்குடி சேகரம் ஆழ்வான்துலுக்கப்பட்டி சபையில் உள்ள சிறிய ஆலயத்திற்கு பதிலாக புதிதாக ஆலயம் கட்ட சபை மக்களால் தீர்மானிக்கப்பட்டு ஆலய வளாகத்திற்குள்ளே பெரிதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விழாவிற்கு சேகரதலைவர் போதகர் ஐஸ்டின் தலைமை வகித்தார். நெல்லை சிஎஸ்ஐ பிஷப் கிறிஸ்துதாஸ் சிறப்பு ஜெபம் செய்து புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். விழாவில் சபை மக்கள் திரளாய் கலந்து கொண்டனர்.