உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயலுார் அக்னிவீரன், கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்

வயலுார் அக்னிவீரன், கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்

விருத்தாசலம்: வயலுார் அக்னிவீரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் வயலுாரில் விநாயகர், சப்தகன்னிகள், அக்னிவீரன், கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதிஹோமம், வாஸ்துசாந்தி, முதல்கால பூஜைகள் துவங்கின. நேற்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோபூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட வேள்வி பூஜைகள் நடந்தன. காலை 9:10 மணிக்கு மேல், 10:25 மணிக்குள் விநாயகர், சப்தகன்னிகள், அக்னிவீரன், கருப்புசாமி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவர் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !