குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்க வலியுறுத்தல்
உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும் என பாரத திருமுருகன் திருச்சபையினர் மனு அனுப்பியுள்ளனர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தப்படியாக பல லட்சம் பக்தர்கள் கூடும் திருவிழாவாகும். இதன் உபகோவில்களாக சிதம்பரேஸ்வரர் கோயில்,விண்ணவரம் பெருமாள் கோயில், கண்டுகொண்ட விநாயகர் கோயில் உள்ளது.சிதம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது.இது போன்று உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோயில் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.இக்கோயில் புனரமைப்பு செ#து கும்பாபிஷேகள் நடத்த வேண்டும் என்றால் அறங்காவலர் நியமனம் செய்தால் அவர்கள் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் செ#ய உதவியாக இருக்கும்.மேலும் குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.பக்தர்களின் வசதிக்காக பல் வேறு அடிப்படைவசதிகள்,கோயில் விரிவாக்க செய்வது போன்ற திருப்பணிகள் நடைபெறுவதற்கு அறங்காவலர்கள் தேவைப்படுகிறது. எனவே உடனடியாக குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாரத திருமுருகன் திருச்சபை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.