காளிப்பட்டி பாட்டப்ப சுவாமி மகா கும்பாபிஷேகம்!
ADDED :4332 days ago
ஆட்டையாம்பட்டிக்கு அருகேயுள்ள மஹேந்ரா கல்லூரி பின்புறம் அமைந்துள்ள பாட்டப்பசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழாவின் 3–ஆண்டு நிறைவு நாளையொட்டி யாக பூஜை விழா நாளை (வெள்ளிகிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி தீர்த்தகுடம், பால்குடம் ஊர்வலம் கந்தசாமி கோவிலில் வழியாக பாட்டப்ப சுவாமி கோவிலை சென்றடைகிறது. இரவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 7–ந் தேதி காலையில் விநாயகர் பூஜையும், கல்சாபிஷேகமும், அலங்காரமும் மஹா தீபாரதனையும் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படவுள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கட்டிட பணிக்குழு உறுப்பினர்கள் மாமுண்டி, எம்.பி. முத்துவேல், நெத்திமேடு பிரபு, கே.பி.குமார், எம்.வி.ஜெகநாதன், திருநாவுக்கவுண்டனூர், சக்திவேல் மற்றும் சிவபகோத்திர மருத்துவ நாவிதர் குல உள்ளூர் வெளியூர் பங்காளிகள் முன்னின்று செய்து வருகிறார்கள்.