ராமேஸ்வரம் கோயில் யானைக்கு ரூ.4.50 லட்சத்தில் மணி மண்டபம்!
ADDED :4419 days ago
ராமேஸ்வரம்: இறந்து போன ராமேஸ்வரம் கோயில் யானை பவானிக்கு, ரூ.4.50 லட்சத்தில், மணி மண்டபம் அமைக்க பூமி பூஜை நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை பவானி, 42. கடந்தாண்டு நவ.,25ல், முதுமலையில் நடந்த புத்துணர்வு முகாமில், ஆற்றில் விழுந்து இறந்தது. அதன் உடல் ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான கார் பார்க்கிங் பகுதியில் புதைக்கப்பட்டது. அதன் நினைவாக, ரூ.4.50 லட்சத்தில் மணி மண்டபம் அமைக்க, கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. பவானி இறந்து ஓராண்டு முடிவடைந்ததால், கார் பார்க்கிங்கில், பூஜை நடந்தது. பின், கோயில் இணை கமிஷனர் செல்லவராஜ் தலைமையில், கோயில் குருக்கள் மந்திரம் முழங்க மணி மண்டபத்திற்கான, பூமி பூஜை நடந்தது. கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் மேலாளர் கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.