உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிச., 9ல் ஆருத்ரா தரிசன திருவிழா துவக்கம்

டிச., 9ல் ஆருத்ரா தரிசன திருவிழா துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா டிச., 9ல் துவங்குகிறது. அன்று காலை மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதல் நடைக்கும். தினமும் ஓதுவாரால் திருவெண்பாவை பாடப்படும். டிச., 17 காலையில் சட்டத்தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருளி கிரிவலம் நடக்கும். இரவு கோயில் முன் அமைக்கப்பட்ட ராட்டினத்தில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் எழுந்தருள, ராட்டின திருவிழா நடக்கும். டிச., 18 அதிகாலை மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு, தைலக் காப்பு சாத்துப்படியாகி, உற்சவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். களி பிரசாதம் வழங்கப்படும். சுவாமி கிரிவலம் வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !