ராஜகணபதி கோவிலில் விக்ரகங்கள் பிரதிஷ்டை
விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி எத்திராஜ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் வழுதரெட்டி எத்திராஜ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் இன்று(9ம் தேதி) அஷ்டபந்தன விக்ரக பிரதிஷ்டை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு கணபதி ஹோமம், 11:00 மணிக்கு சுதர்சன ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம், மாலை 4:00 மணிக்கு விக்ரகங்களுக்கு பிரதிஷ்டை மற்றும் ஹோம பூஜைகளும், கரிகோலம் நடந்தது.இன்று காலை 7:30 மணிக்கு வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து வைகுந்தவாச பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஹயக்ரீவர், சொர்ணலிங்கேஸ்வரர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நந்தீஸ்வரர், சீரடி பாபா ஆகிய விக்ரகங்களுக்கு பிரதிஷ்டை, தீபாராதனை நடக்கிறது.