புனித அமல அன்னை ஆலய தேரோட்டம்
ADDED :4363 days ago
ஈரோடு: புனித அமல அன்னை ஆலயத்தில், சிறப்பு திருப்பலி மற்றும் தேரோட்டம் விழா நேற்று நடந்தது. ஈரோடு ஸ்டேட் பாங்க் ரோட்டில், புனித அமல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. கடந்த, ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன், புனித அமல அன்னை ஆலயத்தில் திருவிழா துவங்கியது. நேற்று, கோவை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து, பங்குத்தந்தை ஜேக்கப் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும், இரவு தேர் பவனி நிகழ்ச்சியும் நடந்தது.