உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொட்டல்புதூர் தூய சவேரியார் ஆலய திருவுருவ பவனி

பொட்டல்புதூர் தூய சவேரியார் ஆலய திருவுருவ பவனி

ஆழ்வார்குறிச்சி: பொட்டல்புதூரில் முக்கூடல் செல்லும் ரோடுஅருகே தூய சவேரியார் ஆலயம் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 3ம் தேதி மாலை 6.30 மணிக்கு பங்குதந்தை ஆரோக்கியசாமி புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள், இறைமக்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. பின் தென்காசி உதவி பங்குதந்தை அந்தோணிசாமி இறைவனின் திருவுளம் எனும் தலைப்பில் மறையுரையாற்றினார். பின்னர் திருப்பலி நடந்தது. இரண்டாம் நாள் கோவில்பட்டி உதவி பங்குதந்தை பிரான்சிஸ் சேவியர் இறைவனின் பரிவு, மூன்றாம் நாள் ஆவுடையானூர் பங்குதந்தை வி.கே.எஸ்.அருள்ராஜ் இறைவன் எனது பாறை, நான்காள் நாள் கருத்தப்பிள்ளையூர் பங்குதந்தை சூசைசெல்வராஜ் பார்வை பெற வேண்டும் எனும் தலைப்புகளில் மறையுரையாற்றினர். ஐந்தாம் நாள் கல்லிடைக்குறிச்சி பங்குதந்தை ரெக்ஸ்ஜஸ்டின், இணை பங்குதந்தை பீட்டர் பிச்சை கண்ணு ஆகியோரின் மறையுரையும், திருப்பலியும் அதனை தொடர்ந்து புனிதரின் திருவுருவ பவனி பொட்டல்புதூர் முக்கிய வீதிகள் வழியாக இன்னிசையுடன் ஊர்வலமாக வந்தது. பவனி வந்த புனிதரை இறைமக்கள் வரவேற்று வழிபட்டனர். நேற்று திருவிழா சிறப்பு திருப்பலியும், தென்காசி மறைமாவட்ட அதிபர் பங்குதந்தை வியாகப்பராஜ் நான் இறைவனின் அடிமை எனும் தலைப்பில் திருவிழா சிறப்பு மறையுரையாற்றினார். பின்னர் சிறப்பு திருப்பலியும், கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கடையம் பங்குதந்தை ஆரோக்கியசாமி மேற்பார்வையில் புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள், பொட்டல்புதூர் இறைமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !