உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

வைத்தீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

சேலம்: சேலத்தில், வைத்தீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம், சாமிநாதபுரம், மாணிக்கம் தெருவில், சாமி வைத்தீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, 8ம் தேதி அதிகாலை, 4.30 மணியளவில், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 6 மணிக்கு விக்னேஸ்வரா பூஜை, இரவு, 7.30 மணிக்கு, முதல் கால யாகசாலை நடந்தது. இரவு, 11.30 மணியளவில், அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை, 4.30 மணியளவில் ஹோம பூஜையும், 5 மணிக்கு மஹா தீபாராதனை செய்து, சிறப்பு வழிப்பாடு செய்தனர். காலை, 6.45 மணிக்கு கடம் புறப்பாடும், 7 மணியளவில் விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து, மூலவர் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சிவஸ்ரீ ஞானகந்தன் குருக்கள் கும்பாபிஷேகத்தை செய்து வைத்தார். திரண்டிருந்த பக்தர்கள் "சிவ சிவ, "ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்து, வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பகல், 12 மணிக்கு அன்னதானம் வழங்கினர். இன்று முதல், மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !