பழநி மெட்டீரியல் ரோப்கார் இயக்கம்
ADDED :4363 days ago
பழநி:பழநிமலைக்கோயிலுள்ள மெட்டீரியல் ரோப்காரில் பராமரிப்பு பணிகள் முடிந்து, நேற்று முதல் வழக்கம்போல் இயங்க துவங்கியது. பழநி மலைக்கோயிலுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் இதர பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை ஐந்து நிமிடத்தில், ஏற்றிச்செல்லும் வகையில் மெட்டீரியல் ரோப்கார் இயங்குகிறது. இதன் ஆண்டுபராமரிப்பு பணிகள் டிச.,3 ல் துவங்கியது. "மெட்டீரியல் ரோப்காரில், 600 மீட்டர் அளவிற்கு கொல்கத்தாவில் வாங்கப்பட்ட புதிய இரும்பு வடக்கயிறு மற்றும் பல்சக்கரங்கள் ஆயில், கிரீஸ் மாற்றப்பட்டது. நேற்று முன்தினம், குறிப்பிட்ட அளவு எடைகற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று முதல் வழக்கம்போல, மெட்டீரியல் ரோப்கார், பெட்டியில் பஞ்சாமிர்தம் ஏற்றிச்செல்லப்படுகிறது.