ராம ஆஞ்ச நேயர் சுவாமி திருக்கோவில் சம்ப்ரோக்ஷணம்
சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம் காட்டுவனஞ்சூரில் ரூ.15 லட்சத்தில் புதிதாக ராம பக்த ஆஞ்ச நேயர் சுவாமி திருக்கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக வாஸ்து சாந்தி பூஜை, சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி, அங்குரார்பணம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், மகா சாந்தி ஹோமம் நடந்தது. காலை 6 மணிக்கு கோ பூஜை, புண்யாக வாசனம், அக்னி ஆராதனையும் கும்ப புறப்பாடு நடந்தது. திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சார்யார் தலைமையில், நாராயணபட்டர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. மாஜிஸ்திரேட் கங்காராஜ், ஒன்றிய சேர்மன் அரசு, பேரூராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன்கள் சீனிவாசன், சன்னியாசி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் குசேலன், நாராயணன், ராஜேந்திரன், தாசில்தார் மணிவண்ணன், நிலைய தீயணைப்பு அலுவலர் (பொ)நல்லரசு, வணிகர் பேரவை மாவட்ட பொரு ளாளர் முத்துகருப்பன், வைத்திலிங்கம், அன்பழகன், நடராஜய்யர், பழமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.