காரைக்கால் கோவில்களில் கும்பாபிஷேகம்!
காரைக்கால்: காரைக்காலில் நேற்று ஒரே நாளில் மூன்று கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலும் ஒன்றாகும்.இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காரைக்கால் முல்லை நகரில் உள்ள முல்லை மாரியம்மன் கோவிலிலும் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வரபூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். காரைக்கால் தலத்தெருவில் முள்ள தீப்பாச்சி அம்மன் என்றழைக்கப்படும் சப்த மாதர்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாரா, இந்திராணி, சாமுண்டி ஆகிய சக்தி தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.