அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி உற்வசம்
ADDED :4359 days ago
ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வரும், 13ம் தேதி கைசிக ஏகாதசி உற்சவம் நடக்கிறது. ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் என்று அழைக்கப்படும், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி உற்சவம் நடக்கிறது. இந்தாண்டு வரும், 13ம் தேதி கைசிக ஏகாதசி நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக, வரும் ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. வரும், 13ம் தேதி காலை ஆறு மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு அபிஷேகமும், மாலை, ஏழு மணிக்கு அரங்கநாதருக்கு கைசிக ஏகாதசி மகா உற்சவமாக, 365 வஸ்திரம் சமர்பிக்கும் வைபவம், கைசிக மகாத்மியம் பாராயணம் பிரபந்த கோஷ்டியினரால் வாசிக்கப்படும். ஏகாதசி விழாவில் பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என்று, எம்பெருமானார் நித்ய கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் கேட்டு கொண்டனர்.