ஈரோடு அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை
ADDED :4423 days ago
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்திருவிழா கடந்த மாதம், 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, ஏழாம் தேதி குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சியும், எட்டாம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் முப்பாட்டு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று மாவிளக்கு எடுத்தனர். இன்று மதியம் அன்னதானம் நடக்கிறது. இரவு, 9 மணிக்கு கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கர் சந்திரன், செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.