உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டையில், ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை, அன்னதானம் உள்பட முப்பெரும் விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, வழிபாடு நடத்தினர். புதுகை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில், வங்கார ஓடை அருகே ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கன்னி பூஜை, அன்னதான விழா, திருவிளக்கு பூஜை என, முப்பெரும் விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தர்ம சாஸ்தாவுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்பட, 11 அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஐயப்ப ஸ்வாமிக்கு வெள்ளி கலசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து, புதிய உற்ஸவர் தர்மசாஸ்தா ஸ்வாமி திருவீதியுலா, கன்னி ஸ்வாமிகள் அலங்காரம் செய்து கொண்டு, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு பெரியகடை வீதி, மெயின்ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக சன்னதியை வந்தடைந்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் நடந்தது. விழா ஏற்பாட்டை ஐயப்பா சேவா சங்க தலைவர் பால் குருசாமி மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !