பாபநாசம் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் பாபவிநாசர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் திருவாதிரை திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதனை தொடர்ந்து கொடிமரம், பீடம் அலங்கரிக்கப்பட்டு காலை ய்மார் 9.20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடியை கோயில் பட்டர் ஹரிகரன் ஏற்றினார். இதில் டாணா மின்வாரிய உதவி மின்பொறியாளர் வெங்கடய்ப்பிரமணியன், விக்கிரமசிங்கபுரம் திருவாவடுதுறை ஆதீன அலுவலர்கள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று முன்தினம் முதல் தினந்தோறும் கோயிலில் திருவெம்பாவை வழிபாடு நடந்து வருகிறது. திருவாதிரை திருவிழாவான வரும் 18ம் தேதி காலை நடராஜர் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.