மழை வேண்டி சிறப்பு வழிபாடு
ADDED :4357 days ago
வள்ளியூர்: வள்ளியூர் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் மழை வேண்டி 1008 சங்காபிஷேக பூஜை நடந்தது.மழைவேண்டியும், உலகத்தில் அமைதி நிலவவேண்டியும், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களின் நலன் வேண்டியும் வள்ளியூர் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் திருநாவுக்கரசர் சிவப்பணி மன்றம் சார்பில் 1008 சங்காபிஷேக பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு ய்வாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகாராஜபட்டர், ஐயப்ப பட்டர் ஆகியோர் 1008 சங்காபிஷேக பூஜைகளை நடத்தினர். பூஜையில் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் திருநாவுக்கரசர் சிவப்பணிமன்ற ராமகுட்டி உட்பட பலர் செய்திருந்தனர்.