பக்த ஆஞ்சநேயர் கோவிலில் பாலாலயம்
ADDED :4348 days ago
காஞ்சிபுரம்: சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள, பக்த ஆஞ்சநேயர் கோவிலில், இன்று பாலாலயம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள, பாடாலாத்தரி நரசிம்ம பெருமாள் கோவில் சன்னிதி தெருவில், பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஆஞ்சநேய சுவாமிக்கு, தனி விமானம் கட்ட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு அறநிலையத் துறை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. சன்னிதி தெரு நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் அறநிலையத் துறையினர் இணைந்து, விமானம் கட்டும் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். இதையடுத்து, ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று மாலை, யாகசாலை அமைத்து, சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை, 9:30 மணிக்கு, ரேவதி நட்சத்திரத்தில், பாலாலயம் நடைபெற உள்ளது.