புக்கை கோவிலில் மண்டலாபிஷேகம்
ADDED :4425 days ago
நகரி: புக்கை, காசி விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூஜை, நடைபெற்றது. நகரி அடுத்த, புக்கையில் உள்ள, அன்னபூரணி உடனுறை காசி விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 48 நாட்களுக்கு முன், மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் இக்கோவிலில், கும்பாபிஷேகத்திற்கு பின், மூலவர், அன்னபூரணி, விநாயகர், சுப்பிரமணியர், மற்றும் பரிவார தேவதைகள் சன்னிதிகளில், மண்டல பூஜையையொட்டி, சிறப்பு அபிஷேகம், நேற்று முன்தினம் நடந்தது.