உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பக்தர்களுக்காக கூடுதல் அரசு பஸ்கள் இயக்கம்!

சபரிமலை பக்தர்களுக்காக கூடுதல் அரசு பஸ்கள் இயக்கம்!

திண்டுக்கல்: சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக கூடுதல் பஸ்களை இயக்க திண்டுக்கல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் மண்டல பூஜை டிச., 26, மகரவிளக்கு பூஜை ஜன.,16 நடைபெற உள்ளது. திண்டுக்கல், பழநி, திருச்சி, மதுரையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்காக டிச., 15 லிருந்து ஜன., 16 வரை கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.குமுளியிலிருந்து சபரிமலைக்கு செல்ல இணைப்பு பஸ்கள், கேரள போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. மண்டல பூஜை அன்று 100 பஸ்களும், மகரவிளக்கு பூஜையின்போது தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக பஸ் ஸ்டாண்ட்டுகளில் போக்குவரத்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுமேலாளர் சாரங்கன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !