உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி இரண்டாவது வின்ச் இயக்கம்!

பழநி இரண்டாவது வின்ச் இயக்கம்!

பழநி: பழநிமலைக்கோயிலுள்ள,  இரண்டாம் எண் வின்ச்-ல்  பராமரிப்பு பணிகள் முடிந்து, பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயங்குகிறது. பழநிமலைக்கோயிலுக்கு எளிதாக 7 நிமிடத்தில் செல்லும் வகையில் மூன்று வின்ச்-கள் இயங்குகிறது. இவற்றில் இரண்டாவது வின்ச், ஆண்டு பராமரிப்பு பணிக்காக, டிச.4ல் நிறுத்தப்பட்டது. இதிலுள்ள இரும்புவடக்கயிறு மற்றும் உதிரிபாகங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தண்டவாளத்திலுள்ள உருளைகளில் கிரீஸ், ஆயில் மாற்றி, வின்ச் பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று 5 டன் எடையுள்ள, மண் மூடைகளை வைத்து சோதனை ஓட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து  இன்று இரண்டாம் எண் வின்ச் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !