வேப்பமரத்துக்கு சிறப்பு வழிபாடு
ADDED :4327 days ago
துறையூர்: பால்வடியும் வேப்பமரத்துக்கு காவேரிப்பட்டி கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காவேரிப்பட்டி மானிய நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள வேப்பமரத்தில், திடீரென பால் வந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் அதிசயித்தனர். மஞ்சள் பூசி அந்த மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி, அம்மனாக நினைத்து தீப வழிபாடு செய்தனர். வேப்பமரம் கிராம மக்கள் மத்தியில் கிருமி நாசினியாகவும், தீய சக்திகளை விரட்டும் சக்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வேப்பமரத்தில் பால் வடியும் போது, அதை அம்மனாகவே நினைத்து வழிபாடு செய்கிறோம் என கிராம மக்கள் கூறினர்.