உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம்காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு ரூ.84 ஆயிரம் வசூல்

ஓம்காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு ரூ.84 ஆயிரம் வசூல்

ஈரோடு: கருங்கல்பாளையம் ஓம்காளியம்மன் கோவில் உண்டியல், நேற்று திறந்து எண்ணப்பட்டதில், 84 ஆயிரத்து, 273 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஈரோடு, கருங்கல்பாளையத்தில், அறநிலையத்துறைக்கு உட்பட்ட, ஓம்காளியம்மன் கோவில் பண்டிகை வெகு விமர்சையாக நடக்கிறது. அப்போது, அதிக அளவில் கோவிலுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆண்டுதோறும், இரண்டு முறை கோவில் உண்டியல் திறக்கப்படுவது வழக்கமாகும். நேற்று காலை பரம்பரை அரங்காவலர் பாலகிருஷ்ணன், அறநிலையத்துறை செயல் அலுவலர் குழந்தாயி முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 84 ஆயிரத்து, 273 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !