விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு 108 சங்காபிஷேகம்!
ADDED :4331 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. சனி பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 10:45 மணிக்கு நந்தி பகவானுக்கு 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன் போன்ற 12 சிறப்பு பொருட்களால் அபிஷேகம், சங்காபிஷேகம் நடந்தது. அருகம்புல் மாலைகளால் அலங்கரித்து தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.