உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வற்றிய புனித நதி,குளங்கள்: பழநி பக்தர்களுக்கு சிக்கல்!

வற்றிய புனித நதி,குளங்கள்: பழநி பக்தர்களுக்கு சிக்கல்!

பழநி: பழநி வட்டாரத்தில் போதிய மழையில்லாமல், புனித நதிகள், குளங்களில் தண்ணீர் இல்லாதால், பக்தர்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழநியில் தைப்பூசத்தையோட்டி, மார்கழி,  முதல் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்குகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்குமுன், பழநியில் முக்கிய குளமான, வையாபுரி குளம், மற்றும் சண்முக நதிகளில் நீராடி ஓய்வுயெடுத்து மலைக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு போதிய மழையில்லாததால், முக்கிய அணைகளான வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததுள்ளது.  குடிநீர் தேவைக்க நீர்சேகரிக்கப்பட்டு, வெளியேற்றப்படுகிறது. இதனால் குளங்கள் மற்றும் நதிகளில் தண்ணீர் இல்லை.    தைப்பூசத்திருவிழாற்காக பாதயாத்திரையாக வரும் வெளியூர் பக்தர்கள் புனித குளங்களில் நீராட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி,தேவஸ்தான நிர்வாகங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !