ராஜகாளியம்மன் கோயிலில் தனுர் பூஜை!
ADDED :4494 days ago
கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், தனுர்மாத பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு மஞ்சள், பால் அபிஷேகங்கள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு, விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிறப்பு ஆராதனை, அன்னதானம் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தனுர்மாத பிறப்பு பூஜை நடந்தது. விசேஷ அபிஷேக, ஆராதனையுடன் துவங்கிய விழாவில், திருவிளக்கு பூஜை நடந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நடந்த பூஜையில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.