உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் அவதார விழா

அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் அவதார விழா

காஞ்சிபுரம்: அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில், திருமங்கையாழ்வார் அவதார திருநாள் விழா கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரத்தில் சிறந்து விளங்கும் வைணவ கோவில்களில் ஒன்றான, அழகிய சிங்கப்பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோவில், அழகிய சிங்கப்பெருமாளை திருமங்கையாழ்வார் பாடிஉள்ளார். அவர் அவதரித்த கிருத்திகை நட்சத்திரத்தில், அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் காலையில் அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. அன்று மாலை, பெருமாளுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் விஷேச பூஜை நடந்தது. பெருமாளுடைய மாலைகள் பிரசாதங்கள், நிவேதனம் செய்து, திருமங்கையாழ்வாருக்கு வழங்கப்பட்டது. பின் அந்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !