உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ மகா கணபதி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ மகா கணபதி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

அவிநாசி; பழங்கரை இந்திரா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா கணபதி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


அவிநாசி வட்டம்,பழங்கரை கிராமம், இந்திரா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா கணபதி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு கடந்த 12ம் தேதி முதல் கால யாக பூஜையில் கணபதி, லட்சுமி,நவக்கிரக ஆகிய ஹோமங்கள், விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. நேற்று மங்கல இசை, விநாயகப் பெருமானுக்கு உயிர் ஊட்டுதல், மூல மந்திரங்கள், கலசங்கள் புறப்பாடு ஆகியவை நடைபெற்று விநாயக பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் கோமாதா பூஜை தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்திரா நகர் ஊர் மக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !