உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 5 கோடி ரூபாய் பண நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த மணிமுத்து மாரியம்மன்

5 கோடி ரூபாய் பண நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த மணிமுத்து மாரியம்மன்

கோவை:  காட்டூர் ஸ்ரீ மணிமுத்து மாரியம்மன் கோவில்ல் 50 வது ஆண்டு உற்சவ விழாவில் பண அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


கோவை, காட்டூர் தொட்டராயன் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீ மணிமுத்து மாரியம்மன் கோவியில் 50 வது ஆண்டு உற்சவ விழா கடந்த 24.ம் தேதி முதல் நடந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக மூலவர் மணி முத்து மாரியம்மன் தங்கக் காப்பு கவசத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு, தன லக்ஷ்மி அலங் காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுமார் 5 கோடி ரூபாய் பண அலங்காரத்தில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !