காளஹஸ்தி மகா சிவராத்திரி விழா; ஹம்ச வாகனத்தில் வலம் வந்த சுவாமி
ADDED :236 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10- ஆம் தேதி முதல் வெகுவிமரிசையாக நடந்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் அன்ன ( ஹம்ச)வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானப் பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூபம் மற்றும் தீபாராதனை நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.