உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழா கண் விதித்து ரசித்த பத்தர்கள்

விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழா கண் விதித்து ரசித்த பத்தர்கள்

கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை பக்தியுடன் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஆமைக்குளம் பகுதியில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், தன் தவத்தை கலைக்கும் மன்மதனை சிவன் நெற்றிக்கண் திறந்து எரிக்கும் காமன் கூத்து திருவிழா பாரம்பரியம் மாறாமல் நடந்து வருகிறது. 34 ஆண்டு விழா 26ம் தேதி காமன் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் மாலையில் ரந்தி - மன்மதன் வேஷம் அற்ற இளைஞர்கள் வீடு வீடாக சென்று, நடனம் ஆடி வந்தனர். இதன் நிறைவு விழா நேற்று இரவு 9:00 மணிக்கு ஆமைகுளத்தில் துவங்கி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.

நள்ளிரவு 1:00 வில் பாலித்தல், பட்டத்து தேர் கண் திறந்து ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து ரதி - மன்மதன் திருமண நிகழ்ச்சிகளும், மொய் விருந்து நிகழ்ச்சியும் நடந்தது. இன்று அதிகாலை, 2:30 மணிக்கு சிவபெருமான் தியானத்தில் அமரும் நிகழ்ச்சி, தூதுவன் வருகை, தட்சன் யாகம் நிகழ்ச்சிகள் நடந்தது. வீரபத்திரன் வருகை, தடசன் வதைப்படலம், அதிகாலை 5:15 மணிக்கு பாசக்கயிற்றுடன் காளைன், சிங்கிலி வருகை நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை, 5:30 மணிக்கு, தவத்தை கலைக்கும் மன்மதனை சிவபெருமான் நெற்றிக்கண் மூலம் எதுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாரம்பரிய முறையில் நடந்த இவ்விழாவை, பொதுமக்கள் விடிய விடிய கண்விழித்து ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !