வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :234 days ago
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்கள், தேங்காய் வைத்து புன்யாவஜனம், அக்னி பிரதிஷ்னை, மகாலட்சுமி, லட்சுமிநரசிம்மர், பஞ்ச கந்த, சாந்தி யாக பூஜைகள் நடந்தது. கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் நடத்தினர். பின்னர் இரவு திருக்கல்யாணம் சாமி வீதி உலா நடந்தது. ஏற்பாட்டினை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பத்மநாபன், ரியல் எஸ்டேட் பிரமுகர் முரளிராஜன் செய்திருந்தனர்.