உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்

திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்

கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.


கடலுார், திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில், 99ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஒன்பதாம் நாளான இன்று காலை சக்தி கரகம், பால்குடம் கொண்டு வரப்பட்டது. மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !