உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை அழகிய கூத்தர் கோவிலில் தேரோட்டம்!

நெல்லை அழகிய கூத்தர் கோவிலில் தேரோட்டம்!

திருநெல்வேலி: நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை, அழகிய கூத்தர் கோவிலில், திருவாதிரை தேரோட்டம் நடந்தது. நெல்லை, தாமிரபரணி கரையில், ராஜவல்லிபுரம் அழகிய கூத்தர் கோவில் பிரசித்தி பெற்றது. இதன் கூரை செம்பு தகடுகளால் வேயப்பட்டது. எனவே, செப்பறை கோவில் எனவும் பெயருண்டு. இங்கு, மார்கழி திருவாதிரை திருவிழா, கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் அழகிய கூத்தரின் தேரோட்டம், விமரிசையாக நடந்தது. இன்று அதிகாலையில், மகா அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை, 5:30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. பிற்பகலில், அழகிய கூத்தர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !