உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உவரி கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி

உவரி கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி

திசையன்விளை: உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் மூலவர் மீது சூரிய ஒழி விழும் அதிசய நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகின்றது. தென்மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று உவரிசுயம்பு லிங்கசுவாமி கோயிலாகும். இக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ளது மட்டுமல்லாது.மார்கழி மாதத்தில் மட்டும் கதிரவன் காலையில் வழிபடும் ஈஸ்வரன் என்பதும், மனிதர் கைபடசெய்யாது தானே தோன்றி மக்களை காத்து ரட்சிக்கும் லிங்கம்சுயம்புலிங்கம் என்பன இக்கோயிலில் தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகம், தை தேரோட்டம், பங்குனி உத்திரம், ஆடி, தை அமாவாசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்துவருகின்றன.இவ்விழாக்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். ஆண்டு தோறும் மார்கழி மாதம் 30 நாளும் இக்கோயிலில் உள்ள மூலவர்சுயம்புலிங்கம் மீது காலைசுமார் 6.45 முதல் 6.50 வரைசுமார் 5 நிமிடங்கள் ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்துவருகின்றது. வேறு சில ஆலயங்களில் இது உண்டு என்றாலும் ஒருநாள், இருநாள்தான் விழுமாம். ஆனால் 30 நாட்கள் முழுமையாக சிவலிங்கத்தின் மீது ஒளிபடுவது இக்கோயிலின் தனிச்சிறப்பாக கூறப்படுகின்றது. நடப்பாண்டில் நேற்று முன்தினம் மார்கழி மாதம் துவங்கியது.இதையொட்டி நேற்று முன்தினம் முதலே கர்பககிரஹத்தில் உள்ள மூலவர்சுயம்புலிங்கசுவாமி மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வ துவங்கியது. இதனை திரளான பக்தர்கள் பார்த்து பக்தி பரவசமடைந்தனர். இந்நிகழ்வு தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் நடக்கும். மற்ற மாதங்களில் இது போன்ற காட்சியை கானஇயலாது என்பது குறிப்பிடதக்கது. இக்கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணிக்கே கோவில் நடைதிறக்கப்பட்டு 5 மணிக்கு தனூர் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜையும், தொடர்ந்துசுவாமிக்கு அபிஷேகம், உதயமார்த்தாண்டபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது.இன்று (18ம் தேதி) திருவாதிரை திருவிழா நடக்கிறது. விழாவில் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து 3 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, அபிஷேகம், உதயமார்த்தாண்டபூஜை, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. உற்சவர் சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் நடனகோலத்தில் உலா வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !