உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைசிக ஏகாதசி கருட சேவை நிகழ்ச்சி

கைசிக ஏகாதசி கருட சேவை நிகழ்ச்சி

ஆழ்வார்திருநகரி: ஆழ்வார்திருநகரியில் சுவாமி ஆதிநாதர் ஆழ்வார்திருக் கோவிலில் கைசிக ஏகாதசி கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.ஆழ்வார்திருநகரியில் சுவாமி ஆதிநாதர் ஆழ்வார்கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு துவாதசி அன்று காலையில் மதுரகவியாழ்வார் பரம்பரையைச் சேர்ந்த அண்ணாவியார் சுவாமி ஸ்ரீநிவாசன் பொலிந்து நின்றபிரான் சன்னதியில் கைசிக புராணம் வாசித்தார். பின்னர் அவரை பிரம்மரத்தில் அவரது திருமாளிகைக்கு எழுந்தருளச் செய்தனர். பின்னர் இரவு சிறப்பு கருடசேவை நடந்தது. சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் சுவாமி நம்மாழ்வார் ஹம்ச (அன்னம்) வாகனத்திலும் மாடவீதி உலா வந்தனர். நிர்வாக அதிகாரி சிவராம்பிரபு, டவுன் பஞ்., சேர்மன் ஆதிநாதன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாச்சாரி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !