சென்னை கந்தாஸ்ரமத்தில் தனுர் மாத பூஜை விழா!
சென்னை : மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ண பரமாத்மா கீதோபதேசத்தில் கூறியுள்ளபடி, சிறப்புமிக்க தனுர் மாதம் என்கின்ற இந்த மார்கழி மாதம் தேவர்களுக்கு வைகறைப் பொழுதாகும். இத்தகைய வைகறைப் பொழுதில் அதிகாலை வழிபாடு பன்மடங்கு நற்பலன்களை அளிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உலகெலாம் உய்ய, மனித சமுதாயம் தழைக்க குருநாதர் ஸத்குரு ஸ்ரீமத் சாந்தானந்த ஸ்வாமிகளின் அருளாணைக்கிணங்க சென்னை ஓம் ஸ்கந்தாஸ்ரமத்தில் மார்கழி 1ம் தேதி முதல் 29ம் தேதி (13.1.2014) திங்கட்கிழமை வரை தினசரி அதிகாலை 4.30 மணிமுதல் 6.00 மணிவரை, ஸத்குருநாதரின் அருட்கடாக்ஷத்தோடு அனைத்து சன்னதிகளிலுள்ள தெய்வங்களுக்கும் தனுர் மாத விசேஷ பூஜையாக அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனை முதலிய வழிபாடுகள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் பெரும் திரளாக பங்கேற்று தனுர்மாத பூஜா சிறப்புப்பலன்களான பேரின்ப பெருவாழ்வினையும், செல்வ செழிப்பினையும், மேதாவிலாசத்தினையும், தேக ஆரோக்கியத்தினையும் மற்றும் எல்லா நலன்களையும் பெற வழிபாடு செய்கின்றனர்.
சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்கும் வகையில் ஓர் நாள் உபயமாக ரூ.201/-, மற்றும் பால், பழம், புஷ்பம் போன்ற பூஜா திரவியங்கள் நன்கொடையாக ஏற்றுக்கொள்ளப்படும். நன்கொடைகளை பணமாக/காசோலையாக சென்னை ஓம் ஸ்கந்தாஸ்ரமம் என்ற பெயருக்கு கீழ் விலாசத்திற்கு அனுப்பலாம்.
கோமாதா பூஜை (காலை 7.30 மணிக்கு) ரூ. 250/-
மாதா புவனேஸ்வரி ஸமஷ்டி அபிஷேக ஸங்கல்பம் ரூ. 601/-
தத்தாத்ரேயர் ஸமஷ்டி அபிஷேக ஸங்கல்பம் ரூ. 2001/-
அன்னதான உபயம் ரூ.1001/-
தொடர்புக்கு: சென்னை ஓம் ஸ்கந்தாஸ்ரமம், நெ. 1, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600 073. தொ.பே. 2229 0134/ 2229 3388/ 9444629570