கள்ளக்குறிச்சி கோவிலில் ஆருத்ரா மகா தரிசனம்
ADDED :4348 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா மகா தரிசனம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மண்டபத்தில் சிவகாமசுந்தரி, நடராஜர் உற்சவமூர்த்திகளை எழுந்தருள செய்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். அலங்கார தீப வழிபாடு நடந்தது. வீதியுலா உற்சவமும் நடந்தது. பரம்பரை ஆருத்ரா தரிசன கட்டளைதாரர் தங்கராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மீனாட்சி சுந்தரம், கார்த்திகேய குருக்கள் வைபவத்தினை நடத்தினர்.